திங்கள், 29 ஜூன், 2020

அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்

அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த வியாழக்கிழமை ஷார்ஜாவிலிருந்து கேரளாவிற்கு தனி விமானம் ஒன்றினை இயக்கியிருக்கிறது . ஷார்ஜாவிலிருந்து கிளம்பிய ஏர் அரேபியா தனி விமானம் மூலமாக 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 215 பயணிகள் வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு கோழிக்கோடு சென்றடைந்தார்கள் . அமீரக இன்காஸ் யூத் விங் , ராஸ் அல் கைமாவின் இன்காஸ் யூத் விங் பிரிவு மற்றும் ராஸ் அல் கைமா இந்திய சங்கம் ஆகியவை இணைந்து இந்த தனி விமானத்தை இயக்கியிருக்கின்றன . இதுகுறித்து இன்காஸ் யூத் விங் அமைப்பின் தலைவர் ஹைதர் கொடநாட் தட்டதழத் ( Hyder Kodanad Thattathazhath ) பேசுகையில் , " இந்த விமானத்தில் 30 கர்ப்பிணிகள் பயணித்திருக்கிறார்கள் . மேலும் , ஏழு பெண்கள் உட்பட 13 பேருக்கு இலவசமாக விமான டிக்கெட் வழங்கியிருக்கிறோம் " என்றார் .

பயணிகளுக்கு வழங்கப்பட்ட போர்டிங் பாஸில் நிதின் சந்திரனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது . மேலும் , பொருட்கள் வைத்துக்கொள்ளும் பை , பாதுகாப்பு 2056007151861 ( personal protection equipment ) மற்றும் சாக்லேட்டுகள் ஆகியவை அனைத்து பிரயாணிகளுக்கும் வழங்கப்பட்டன . " நிதினின் புகைப்படம் பொறிக்கப்பட்ட போர்டிங் பாஸ் மற்றும் பரிசுப் பைகளை பிரயாணிகளுக்கு வழங்க நினைத்தோம் . நிதினை இதன் வழியாக நாங்கள் நினைவுகூர்கிறோம் " என தட்டதழத் குறிப்பிட்டார் . சுகாதார பணிகளில் முதல் ஆளாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சமூக சேவகராக நிதின் இருந்திருக்கிறார் . கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுகளை நிதின் வழங்கிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

" நிதினின் ஊரான கோழிக்கோட்டிற்கு இந்த தனி விமானத்தை இயக்க வேண்டும் என தீர்மானித்தோம் " என ராஸ் அல் கைமா இந்திய சங்கத்தின் தலைவர் எஸ்ஏ சலீம் ( SA Salim ) தெரிவித்தார் . 

யார் இந்த நிதின் சந்திரன் ? 
கொரோனா காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் , அமீரகத்தில் கர்ப்பமாக இருந்த தனது மனைவியை இந்திய உச்சநீமன்றத்தின் உதவியோடு இந்தியாவிற்கு அனுப்பிய நிதின் சந்திரன் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றிவந்தார் . மாரடைப்பு காரணமாக நிதின் அமீரகத்தில் இறக்க , அதற்கு அடுத்த நாளே ( ஜூன் 9 ) இந்தியாவில் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார் நிதினின் மனைவி ஆதிரா கீதா ஸ்ரீதரன் .

தனது மனைவியின் பிரசவம் இந்தியாவில் நடைபெற வேண்டும் என விரும்பியிருக்கிறார் நிதின் . இதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு அளித்ததைத் தொடர்ந்து நிதினும் அவரது மனைவியும் ஊடங்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவந்தனர் . தனது மனைவியுடன் கேரளா திரும்ப வாய்ப்பு இருந்தபோதும் , எனக்கான சிறப்பு விமானத்தின் இருக்கை , நாடு திரும்ப அவசரத் தேவையுள்ள மற்றவருக்குப் பயன்படட்டும் எனச் சொல்லியிருக்கிறார் நிதின் . பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நபராக இருந்த நிதினை வித்தியாசமான முறையில் இன்காஸ் யூத் விங் அமைப்பின் உறுப்பினர்கள் கவுரப்படுத்தியிருப்பது அமீரக வாழ் இந்திய மக்கள் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது .

செவ்வாய், 16 ஜூன், 2020

தேசியமனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சைமாவட்டதலைவருடன் புதுப்பட்டினம் கிளைSDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ..!





தேசியமனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சைமாவட்டதலைவருடன் #SDPI கட்சி  நிர்வாகிகள் சந்திப்பு ..! 

( NHRCI )-ன் தஞ்சாவூர்மாவட்டதலைவராக
 தேர்ந்தெடுக்கபட்டுள்ள மரியாதைக்குறிய 
S.R.Kஅசன்முகைதீன் B.A.,அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக 
SDPI கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சகோதரர்                             Y .ஔரங்கசீஃப். அவர்கள் தலைமையில்
  புதுப்பட்டினம் SDPI கட்சி  கிளையின் சார்பாக -16-06-2020 இன்று 
 S.ரபிக்கான் கிளை_தலைவர்
MSD.முகமது சுல்தான் செயலாளர்..
S.முத்து மரைக்கான் பொருளாலர்
சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 
கிளை நிர்வாகிகள் அனைவரும் சென்று சந்தித்து  சகோதரர் *S.R.K.அசன் முகைதீன் B.A., (தேசிய மனிதஉரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா)  தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்...!

திங்கள், 15 ஜூன், 2020

சேதுபாவாசத்திரம் , பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை சேதுபாவாசத்திரம் .

 சே சதுபாவாசத்திரம் , பேராவூரணி துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) பராமரிப்பு பணிகள் நடக்கிறது . எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடியம் , கள்ளம்பட்டி , மருங்கப்பள்ளம் , குருவிக்கரம்பை , செருபாலக்காடு , கழனிவாசல் , கொரட்டூர் , துறையூர் , மரக்கா வலசை , உடையநாடு , ஊமத்தநாடு , ராவுத்தன்வயல் , சேதுபாவாசத்திரம் , மல்லிப்பட்டினம் , புதுப்பட்டினம் ,பெருமகளூர் , பேராவூரணி நகர் , காலகம் , பைங்கால் , திருச்சிற்றம்பலம் , குறிச்சி , வாட்டாத்திகொல்லை , ஆவணம் , பட்டத்தூரணி , பின்னவாசல் , மணக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது . இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர் . இதே போல் அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . இதன் காரணமாக அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அய்யம்பேட்டை , பசுபதிகோவில் , வீரசிங்கம்பேட்டை , வயலூர் , ராமாபுரம் , கணபதி அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட் டார கிராமங்களில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய பாபநாசம் உதவி செயற்பொறியாளர் சங்கர் கூறி உள்ளார் .

Breaking :- 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ~ முதல்வர் அறிவிப்பு .!


சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரு நகர பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பின்பற்றப்படும் எனவும் அறிவிப்பு.

மேலும், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக அறிவிப்பு. மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும்
என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.

இந்த மையங்களின் உதவி யால் சுயதொழில் தொடங்கி மு ன்னேறியவ ர்கள் த மி ழ க த் தி ல் ஏராளம். சிறும ற் று ம் கு று தொழிற் சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.

படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீ ழ், இ ய ங் கி வ ரு ம் மாவட்ட தொ ழில் மையமானது, புதிய
தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழி ல் ஆலோசனைகளையும் வழங்குகிறது.

தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மை யத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்டஅ றிக்கை இவை
வழங்கப்படுவதோடு உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகிறது.

சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத்தொ ழி ல் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

அதேபோல கைவினைத் தொழில், குடிசைத்தொழில் இவற்றை ஊக்கப்படுத்துவதற்காக, இத்தொழிலை மேற்கொள்பவர்கள் தங்கள் தொழிலை நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத்தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களன் கீழ்சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவதற்கு,\ மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.

தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்சுயதொழில்தொடங்க
வழங்கப்படும் வங்கிக் கடனில் 1 5 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத் தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அந்தந்தமாவட்ட தலை நகரத்தில் இம்மையம்
அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.
மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியபணிகள் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை வரிசைப்படுத்திப் பார்ப்போம்.
1) பதிவு செய்தல்
2) இணையதளம் மூலம் பதிவு செய்தல்
3) தொழில் முனைவோருக்கு குறிப்பாணை
வழங்குதல்
4)குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ்
வழங்குதல்
5) கைத்தொழில் பதிவுச் சான்றிதழ்
வழங்குதல்.
6)ஒற்றைச்சாள ர முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்
7) ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல்
8) உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
9) வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
10)ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல்
11)சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்
12)தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்

இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இத்திட்டத்திங்கள் குறித்து மேலும் விவரங்கள் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் - 613006 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04362 - 257345 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்..

 "Grow yourself as a tree of benefits. if you are a thorny bush, no one will like you"

-நன்றி 🌹இப்ராஹிம்

சனி, 13 ஜூன், 2020

சீனாவில் மீண்டும் கொரோனா பொதுமுடக்கம்

சீனாவில் மீண்டும் பொதுமுடக்கம்..!

மீண்டும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் பெய்ஜிங்கின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக் கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் சீனா கூறியது. அதன்பின் பெரிய அளவில் கொரோனா பரவாமல் சீனா கட்டுப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன.

உலக நாடுகள் கொரோனா அச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கையை இழந்து நின்றாலும், 5 மாதங்களில் சீனா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. முடங்கிக் கிடந்த மக்கள் நடமாடத் தொடங்கினர். இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் பெய்ஜிங்கின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


உதயை நாச்சிகுளம் பகுதியில் இயங்கி வந்த ரன்வே ஹோட்டல் சற்று முன் ரவுடிகாளால் அடித்து நொறுக்கப்பட்டது





உதயை நாச்சிகுளம் பகுதியில்  இயங்கி வந்த ரன்வே ஹோட்டல் சற்று முன் ரவுடிகாளால் அடித்து நொறுக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை தலைவரும் உரிமையாளர் களில் ஒருவரான சபீர் என்பவருக்கு கத்தி குத்து

மதிய உணவு வாங்க வந்தவர்கள் ஒரு குறிபிட்ட கட்சியை சொல்லி அதன் மாவட்ட செயலாளரை தெரியுமா என்று கேட்டதாகவும் 

தெரியாது என்று சபீர் கூற ...

10 நிமிடத்தில் யார் என்று காட்டுகிறேன்  என்று சொல்லி சென்ற  குண்டர்கள்.

திரும்ப வந்து 7 பேர் கொண்ட கும்பல்  சபீர் என்பரை  செங்கல்லால் தலையில் தாக்கியதுடன்  கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு  தப்பி ஓடினார்

கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்து சென்றதாக தகவல்

கட்சியை வளர்க்க கட்டபஞ்சாயத்தில் ஈடுபடும் சிலர்
இப்போது கத்தி குத்திலும் ஈடுபடுவார்கள்  போல...

தஞ்சைதெற்கு மாவட்டம் பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா புதுப்பட்டினம் யூனிட் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குற்றவாளிகளாக்கப்படும்அப்பாவிகள்! 
நீதியின்
கேலிக்கூத்தைதோலுரிப்போம்!! 

டெல்லி காவல்துறை, மத்திய அரசு மற்றும்  உ.பி அரசின் ஃபாசிச அராஜகத்தை கண்டித்து

பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியாவின் 
தேசம்தழுவியபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13.6.2020, சனிக்கிழமை) தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .

அதன் ஒருபகுதியாக 
தஞ்சைதெற்கு மாவட்டம் 
பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா 
புதுப்பட்டினம் யூனிட் சார்பில் 
(சமூக இடைவெளியுடன் கூடிய)
கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது

செவ்வாய், 9 ஜூன், 2020

தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்






.தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்

மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்திட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.பாதிகப்பட்டவர்களுக்கு அரிசி,மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினர்.இதில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.


அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்

அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்...