அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த வியாழக்கிழமை ஷார்ஜாவிலிருந்து கேரளாவிற்கு தனி விமானம் ஒன்றினை இயக்கியிருக்கிறது . ஷார்ஜாவிலிருந்து கிளம்பிய ஏர் அரேபியா தனி விமானம் மூலமாக 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 215 பயணிகள் வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு கோழிக்கோடு சென்றடைந்தார்கள் . அமீரக இன்காஸ் யூத் விங் , ராஸ் அல் கைமாவின் இன்காஸ் யூத் விங் பிரிவு மற்றும் ராஸ் அல் கைமா இந்திய சங்கம் ஆகியவை இணைந்து இந்த தனி விமானத்தை இயக்கியிருக்கின்றன . இதுகுறித்து இன்காஸ் யூத் விங் அமைப்பின் தலைவர் ஹைதர் கொடநாட் தட்டதழத் ( Hyder Kodanad Thattathazhath ) பேசுகையில் , " இந்த விமானத்தில் 30 கர்ப்பிணிகள் பயணித்திருக்கிறார்கள் . மேலும் , ஏழு பெண்கள் உட்பட 13 பேருக்கு இலவசமாக விமான டிக்கெட் வழங்கியிருக்கிறோம் " என்றார் .
பயணிகளுக்கு வழங்கப்பட்ட போர்டிங் பாஸில் நிதின் சந்திரனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது . மேலும் , பொருட்கள் வைத்துக்கொள்ளும் பை , பாதுகாப்பு 2056007151861 ( personal protection equipment ) மற்றும் சாக்லேட்டுகள் ஆகியவை அனைத்து பிரயாணிகளுக்கும் வழங்கப்பட்டன . " நிதினின் புகைப்படம் பொறிக்கப்பட்ட போர்டிங் பாஸ் மற்றும் பரிசுப் பைகளை பிரயாணிகளுக்கு வழங்க நினைத்தோம் . நிதினை இதன் வழியாக நாங்கள் நினைவுகூர்கிறோம் " என தட்டதழத் குறிப்பிட்டார் . சுகாதார பணிகளில் முதல் ஆளாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சமூக சேவகராக நிதின் இருந்திருக்கிறார் . கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுகளை நிதின் வழங்கிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
" நிதினின் ஊரான கோழிக்கோட்டிற்கு இந்த தனி விமானத்தை இயக்க வேண்டும் என தீர்மானித்தோம் " என ராஸ் அல் கைமா இந்திய சங்கத்தின் தலைவர் எஸ்ஏ சலீம் ( SA Salim ) தெரிவித்தார் .
யார் இந்த நிதின் சந்திரன் ?
கொரோனா காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் , அமீரகத்தில் கர்ப்பமாக இருந்த தனது மனைவியை இந்திய உச்சநீமன்றத்தின் உதவியோடு இந்தியாவிற்கு அனுப்பிய நிதின் சந்திரன் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றிவந்தார் . மாரடைப்பு காரணமாக நிதின் அமீரகத்தில் இறக்க , அதற்கு அடுத்த நாளே ( ஜூன் 9 ) இந்தியாவில் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார் நிதினின் மனைவி ஆதிரா கீதா ஸ்ரீதரன் .
தனது மனைவியின் பிரசவம் இந்தியாவில் நடைபெற வேண்டும் என விரும்பியிருக்கிறார் நிதின் . இதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு அளித்ததைத் தொடர்ந்து நிதினும் அவரது மனைவியும் ஊடங்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவந்தனர் . தனது மனைவியுடன் கேரளா திரும்ப வாய்ப்பு இருந்தபோதும் , எனக்கான சிறப்பு விமானத்தின் இருக்கை , நாடு திரும்ப அவசரத் தேவையுள்ள மற்றவருக்குப் பயன்படட்டும் எனச் சொல்லியிருக்கிறார் நிதின் . பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நபராக இருந்த நிதினை வித்தியாசமான முறையில் இன்காஸ் யூத் விங் அமைப்பின் உறுப்பினர்கள் கவுரப்படுத்தியிருப்பது அமீரக வாழ் இந்திய மக்கள் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக